எவ்ளோ நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் கவலையில்ல.. கூலா செல்ஃபி வீடியோவை பகிர்ந்த அஜித்

by Rohini |
ajith
X

கலவையான விமர்சனம்: விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் கங்குவா படத்தைப் போல இந்த படத்தையும் முழுவதுமாக முடித்து விட பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு வருகின்றன. படத்தை பார்த்த ஒரு சில பேர் அஜித் படம் என்று பெரிய அளவில் எதிர்பார்த்து வர வேண்டாம். படம் நன்றாக இருக்கிறது .அஜித் சிறப்பாக நடித்திருக்கிறார். அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் .ஹாலிவுட் தரத்தில் படம் இருக்கிறது .

டிரெண்டாகும் அஜித்: ஆனால் எப்பவும் போல இருக்கும் அஜித் படம் மாதிரி இந்த படம் இருக்காது என கூறி வருகின்றனர். மற்றும் சிலர் படம் வேஸ்ட் .அஜித்தோட இமேஜையே குறைச்சிட்டாங்க. இது அவருக்கான படமே இல்லை என ஆதங்கத்தில் கொந்தளித்து வருகின்றனர். இப்படி கலவையான விமர்சனங்கள் தான் வெளியாகி இன்றுவரை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. இன்னொரு பக்கம் மகிழ் திருமேனியை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

முடிச்சுவிட்டாங்க: ஆனால் மகிழ்திருமேனியை பொறுத்த வரைக்கும் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல பேட்டிகளில் அவர் கூறியிருந்தது இதுதான். அதாவது படத்தை மிகவும் எதிர்பார்த்து வராதீர்கள் என உண்மையைத்தான் கூறினார். இருந்தாலும் அஜித்தை இப்படியா காட்டுவீங்க என்று மகிழ்திருமேனியை நெட்டிசன்கள் திட்டி வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. இப்படி விடா முயற்சி படத்தை பற்றி பல வதந்திகள் கிளம்பி வரும் நிலையில் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல அஜீத் போர்ச்சுக்களில் தனது ரேஸ் ட்ராக்கில் எடுத்த செல்பியை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்.

செல்ஃபி எடுத்த அஜித்: தனது அணி உறுப்பினர்களுடன் இணைந்து அவர் செல்பி எடுத்த வீடியோ தான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றது. தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் ஒரே நடிகர் அஜித் தான் என்றும் அந்த வீடியோவை பதிவிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தொடர்ந்து கார் ரேசில் ஈடுபட்டு வரும் அஜித் அடுத்தடுத்து தனது அணி உறுப்பினர்களுடன் இணைந்து எப்படியாவது மோட்டார் ரேஸில் இந்தியாவை ஒரு டாப் உயரத்தில் கொண்டு போக வேண்டும் என்ற முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார் .


கார் ரேஸ் எல்லாம் முடிந்த பிறகு தான் அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் பத்தாம் தேதி குட்பேட்அக்லி திரைப்படம் வெளியாக இருக்கின்றது .அந்த படமாவது ரசிகர்களுக்கான படமாக இருக்குமா? என அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அஜித் என்றாலே மாஸ்தான். அது படத்திலும் இருக்க வேண்டும் என்றுதான் ரசிகர்களும் விரும்புகிறார்கள். அது இல்லாத போதுதான் இப்படிப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பிக்கின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DFxQ_rXyoz-/?igsh=cjUyYTVtZTBsbW92

Next Story