4K தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் பில்லா

 
4K தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் பில்லா

தமிழ் சினிமாவில் ரீ ரிலிஸ் கலாச்ச்சாரம் பெரிய டிரெண்டிங்காக உள்ளது. ரஜினியின் படையப்பா, விஜய் நடித்த கில்லி, விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் ரீ ரிலீஸீலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. அந்த வகையில் அஜித் நடித்து ஹிட்டான பில்லா படமும் தற்போது ரீ ரிலீஸ் ஆகிறது.

2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியானது 'பில்லா' திரைப்படம். இந்த படம் அதுவரை இருந்த தமிழ் சினிமாவின் மேக்கிங் ஸ்டைலையே அடியோடு மாற்றியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பழைய பில்லா படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தாலும், அஜித்தின் ஸ்டைலான நடிப்பு, ஹாலிவுட் தரத்திலான ஒளிப்பதிவு, யுவன் சங்கர் ராஜாவின் தெறிக்கவிடும் பின்னணி இசை என அனைத்தும் இணைந்து படத்தை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கியது. நயன்தாரா, நமிதா, பிரபு, ரகுமான் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தது. குறிப்பாக அஜித்தின் ஐ ஆம் பேக் என்ற வசனம் இன்று வரை பிரபலம்.

இந்த நிலையில் வருகிற மே1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை யொட்டி பில்லா ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போது இந்த திரைப்படம் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப 4K ரெசல்யூஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஒலியமைப்புடன் டிஜிட்டல் முறையில் வெளியாகிறது.

From Around the web