வலிமை
அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த நடிகரின் தந்தை ஒரு முக்கியமான நடிகர். அதுமட்டுமல்லாமல் இவர் அஜித்திற்கு நண்பராக அவரின் ஆரம்ப காலத்தில் நடித்திருக்கிறார். தற்போது தன் மகன் அஜித்தின் தம்பியாக நடித்திருக்கிறார் எனவும் கூறிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பானு பிரகாஷ்
அப்டேட்டிற்கே அப்டேட் கேட்க வைத்த படம் தான் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்தில் அஜித், கார்த்திகேயா, ஹூமா குரேசி, சுபத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தனர். இப்படத்தில் அசோக்காக ராஜ் அய்யப்பன் நடித்திருந்தார்.
வலிமை
இந்நிலையில், இவரின் தந்தை தான் பானு பிரகாஷ் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் அமராவதி படத்தில் அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுகென்ன வேலி சீரியலில் ஹீரோவின் தந்தையாக நடித்து வருகிறார். சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…