அஜித் அழைத்தும் நோ சொன்ன விஜய்... நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே!....

அஜித்தின் 60வது படமாக உருவாகிறது வலிமை. இதை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தல நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டு இருந்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது.
வலிமை படத்தின் பெயரை தவிர படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரசிகர்களும் யார் யாரிடமோ சிபாரிசு கூட சென்று விட்டார்கள். ஆனால் அறிவிப்பு தான் வந்த பாடு இல்லை. ஒருபக்கம், வலிமை படத்திற்கு பின் அஜித்தை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், தனது அடுத்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கினால் நன்றாக இருக்கும் எனக்கருதிய அஜித் அவரை செல்போனில் அழைத்தாராம். ஆனால், விக்ரம் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளேன். அப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என அவர் கூற அஜித் அப்செட் ஆகிவிட்டாராம். எனவே, அஜித்தின் அடுத்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.
ஏ.எல். விஜயின் முதல் படமான கிரீடம் படத்தில் அஜித் நடித்தது குறிப்பிடத்தக்கது.