Categories: Cinema News latest news

நீங்க சொல்றது தப்பு.! அஜித் கொடுத்து கொடுத்து முடியாமல் தான் விட்டுட்டார்.! மேடையில் காரசார விவாதம்.!

தமிழ் சினிமா நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அவர்களால் தான் படத்திற்கு பணத்தை செலவு செய்ய முடியாமல், பட்ஜெட் எவ்வளவு இருக்கிறதோ அதில் முக்கால்வாசி சம்பளமாக கொடுக்கப்பட்டு, மீதி காசில் படம் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று தற்போது குரல் வலுத்து வருகிறது.

இதுகுறித்து பல்வேறு மேடைகளில் தமிழ் ஹீரோக்களை, தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் வசைபாடி பேசியுள்ளார். ஏன், விஜய், அஜித், ரஜினி, கமல் என்று அவர்களது பெயரை சொல்லியே வசை பாடி உள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

இப்படி ஒரு மேடையில் நடிகர்களை பற்றி வசைபாடி பேசிவிட்டு கே.ராஜன் செல்கையில், அதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், தமிழ் சினிமா நடிகர்கள் அத்தனை பேரையும் அப்படி சொல்லாதீர்கள். கேப்டன் விஜயகாந்த் அப்படி இல்லை, அதேபோல் சமீபத்திய நடிகர்களில் அஜித்குமார் கூட அப்படி நடந்து கொண்டதில்லை.

இதையும் படியுங்களேன் – கெட்டவார்த்தை போட்டு கமல் சார் நடிப்பை நிறுத்திட்டேன்.! அவரிடம் இப்டிலாம் பேசலாமா லோகேஷ்.? 

தனது திரைப்படம் தோல்வி அடைந்து விட்டால், உடனே அஜித் மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு தேதி கொடுத்து இன்னோர் படம் எடுக்க வாய்ப்பு கொடுத்து வருகிறார்.  அப்படி மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து இதற்கு மேல் கொடுக்க முடியாது என்று நிலைமைக்கு அஜித் தள்ளப்பட்டுள்ளார். அந்த செய்திகூட நமக்கு தெரியும்.’ என்று மேடையில் குறிப்பிட்டார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்.

விவேகம் படம் தோல்வி அடைந்தபோது, மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தை அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்து அந்த படத்தை ஹிட்டாக்கி லாபம் ஈட்டி கொடுத்தார் அஜித்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை குறிப்பிட்டு தான் இயக்குனர் இவ்வாறு பேசியுள்ளார் என்று சினிமாவில் கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan