வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் 2 வேடத்தில் நடிப்பதாகவும், இப்படம் வங்கி கொள்ளை தொடர்புடையது ஏற்கனவே செய்தி வெளியாகிவிட்டது. மேலும், நீண்ட தாடி ,வெள்ளை முடி என அசத்தலான கெட்டப்புக்கு மாறியுள்ளார். மங்காத்தா போல நெகட்டிவ் வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு பின் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது அவரின் 62வது திரைப்படமாகும். இப்படத்தில் தமிழகமெங்கும் ஹோட்டல் தொழில் செய்யும் தொழிலதிபராக அஜித் நடிக்கவுள்ளாராம். அதாவது, இளைஞர் ஒருவர் உழைத்து தொழிலதிபராக மாறி வாழ்வில் உயர்கிறார். அவருக்கு சில எதிரிகள் உருவாகிறார்கள். அவர்களை எப்படி அவர் சமாளித்தார் என்பதுதான் கதை எனக்கூறப்படுகிறது.
இப்படத்தில் மீண்டும் இளமையான அஜித்தை காட்டவுள்ளார்களாம். இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அஜித் ஈடுபட்டுள்ளாராம்.
ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…