Categories: Cinema News latest news

விஜயின் அரசியல் அஜித்தை இந்தளவு மாத்திடுச்சா? இறங்கி வேலை பார்க்கும் தல

Vijay Ajith: தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகளாக இப்போது இருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். ரஜினி கமல் இவர்களுக்கு பிறகு அவர்களுடைய அந்தஸ்தை பெற்றுள்ள நடிகர்களாக அஜித்தும் விஜய்யும் இருக்கிறார்கள். இருவருக்குமே இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் படங்களின் ரிலீஸ் அந்த ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான்.

அந்த அளவிற்கு இருவரையும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் அடுத்ததாக அரசியலை நோக்கி பயணிக்க இருக்கிறார். அவர் நடித்துவரும் கோட் மற்றும் அவருடைய 69 ஆவது படம் இந்த இரு படங்களுக்குப் பிறகு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேர அரசியலில் களம் இறங்குகிறார் விஜய்.

இதையும் படிங்க: பிரபுவை பேச முடியாமல் செய்த எஸ்.பி.பி… அப்படி என்னதான் நடந்தது?

அதனால் சோலோவாக பெர்ஃபார்ம் பண்றதுக்கு அஜித் இப்போது தயாராகி விட்டார். அஜித்தை பொருத்தவரைக்கும் யாரிடமும் தானாக போய் வாய்ப்பு கேட்பதில்லை. யாரிடமும் அந்த அளவுக்கு ஜெல் ஆவதும் இல்லை. ஆனால் இப்போது அஜித்தின் போக்கே மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் விடாமுயற்சி திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்தபடியாக அவர் சிறுத்தை சிவா உடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் தற்போது வந்த தகவல் படி அஜித் பல இயக்குனர்களிடம் தொலைபேசி வாயிலாக சந்தித்து படம் பண்ணலாமா என கேட்டு வருகிறாராம். அதில் எச் வினோத்திடம் விஜயின் படம் குறித்து கேட்ட பிறகு அந்தப் படம் முடிந்ததும் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என கூறி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: பிரசாந்த்லாம் பெரிய இடத்துக்கு போயிருக்கணும்!. மிஸ் ஆயிடுச்சி!.. பிரபல இயக்குனர் உருக்கம்!..

இதற்கிடையில் இந்த ஒரு வார காலத்திற்குள் அஜித்தும் சங்கரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஷங்கரின் அடுத்த படம் வேள்பாரி என இருக்கும் நிலையில் ஒருவேளை அந்த படத்தில் அஜித் இருப்பாரா அல்லது அஜித்தை வைத்து தனியாக சங்கர் படம் எடுக்கப் போகிறாரா என்பது பற்றி தெரியவில்லை என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini