சினிமா விழாவில் கவர்ச்சி கட் அவுட் கவுனில் அஜித் மகள்!.. எல்லா கண்களும் அவர் மேலதான்!..
அஜித் குமார் மற்றும் ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா, சென்னையில் உள்ள லீலா பெலஸில் நடைபெற்ற ‘கதை ஷார்ட்ஸ்’ மொபைல் ஆப் அறிமுக விழாவில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மகன் கரண் தயாநிதி மாறன் உருவாக்கியுள்ள ‘கதை ஷார்ட்ஸ்’ ஆப் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு நிமிட எபிசோடுகளாக மினி சீரிஸ்களை வழங்கும் இந்த செயலி, ரீல்ஸ் பார்க்கும் இளம் தலைமுறையினருக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்பில் நடிகையும் இயக்குநருமான ரோகினி இயக்கிய ‘அவள் = அவன்?’ உள்ளிட்ட பல குறும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என விழாவில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிமுக விழாவில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், அஜித் மகள் அனோஷ்காவின் வருகை சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுவாக அம்மா ஷாலினியுடன் மட்டுமே நிகழ்ச்சிகளில் தோன்றும் அனோஷ்கா, இந்த முறை தனது நண்பர்களுடன் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
கல்லூரி படிப்பை முடித்துள்ள அனோஷ்கா, கரண் தயாநிதி மாறன் மற்றும் சபரிஷ் வெங்கட் உள்ளிட்ட தனது நண்பர்களுக்காக இந்த விழாவில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அனோஷ்காவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
