Categories: Cinema News latest news

நடிப்பை விட்டு ஒதுங்கும் அஜித்.!? எந்த நாட்டில் செட்டில் ஆக உள்ளார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் கூட இப்படி ஒரு நடிகர் இருக்க மாட்டார் என்றே கூறலாம். ஆம், நான் கொடுத்த தோல்வி படங்களை வேறு எந்த நடிகராவது கொடுத்திருந்தால் இந்நேரம் சினிமாவை விட்டே ஓடி இருப்பார்கள் என கூறும் அளவுக்கு தனது ரசிகர் பலத்தால் இன்னும் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் அஜித்.

இவர் நடிப்பில், திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வரும் போதெல்லாம் தியேட்டர் திருவிழாவாக மாறி விடுகிறது என்பதே நிஜம். படம் நன்றாக இல்லை என்றாலும் அஜித் படம் ஓப்பனிங் கிடைத்துவிடும்.

இதையும் படியுங்களேன் – நயன்தாரா காதலர் ‘அந்த’ நடிகருடன் உல்லாச குளியல்.! லீக்கான போட்டோஸ்..,

ஆனால் இவ்வளவு புகழ் உள்ள நடிகர் அஜித், சினிமாவில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளாராம். அந்த செய்தி தான் அவ்வப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருக்கும். அப்படிதான் தற்போதும் இந்த செய்தி வந்துள்ளளது என நினைத்திருந்தனர்.

அதாவது, இன்னும் ஒரு சில வருடங்கள் மட்டும் நடித்துவிட்டு, அதற்கடுத்து, சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடலாம் என அஜித் முடிவு எடுத்துள்ளாராம். மேலும், அவர் சிங்கப்பூரில் செட்டில் ஆக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை.

Manikandan
Published by
Manikandan