முதல்வர் ஆசைக்கு மசியாத அஜித் - விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டது எப்படி? ஜோதிடர் பகீர்!
விஜய்யின் ஜோதிடர்:
அண்மை நாட்களாக தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களுக்கு ஈடாக மிகப்பெரிய அளவில் பிரபலமான நபராக பேசப்பட்டு வருபவர் தான் அவரது தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டித். தளபதியை அரசியலில் நுழைய வைத்ததும் இவர்தான்.
தேர்தலுக்கு முன்னே விஜய் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார் என நம்பிக்கை ஊட்டி அதை வெற்றிகரமாக செய்து காட்டியவரும் இவர்தான். எனவே இந்த ஜோதிடர் மீது மக்களின் பார்வை பிம்பம் மிகப்பெரிய அளவில் விழுந்து இருக்கிறது.
அஜித் மசியலை:
இதனால் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டித் கூறுவதை மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு கேட்கிறார்கள். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது .
அதில் அவர் கூறி இருப்பதாவது…. நான் விஜய்க்கு முன்னதாக நடிகர் அஜித்தை தான் முதல்வராக்க ஆசைப்பட்டேன். அது குறித்து நேரடியாக அஜித்திடம் சென்றே " நீங்கள் எம்ஜிஆர் சாயலிலே இருப்பதால் நிச்சயம் முதல்வர் ஆகும் யோகம் உண்டு என கூறினேன்.
ஆனால், அஜித் தரப்பிலிருந்து அரசியலில் விருப்பமில்லை என்று கராராக தெரிவித்துவிட்டார்கள். அதன் பிறகு நான் அவரை விட்டுவிட்டு வந்து விட்டேன். அவர் புத்திசாலியானவர் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார் என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிடர்.
