வெங்கட் பிரபு ஃபோனையே எடுக்காத அஜித்.. உண்மையை உடைத்த அந்தணன்

by Murugan |
ajithvenkat
X

ajithvenkat

அஜித்:

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக அஜித் யாருடன் இணையப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்தி என்னவெனில் அஜித் மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி கொண்டு வருகின்றன.


ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் மங்காத்தா. அது அஜித்தின் 50 ஆவது திரைப்படமாக அமைந்தது. அஜித்தின் கேரியரில் இந்தப் படத்திற்கு என ஒரு தனி இடம் எப்போதுமே உண்டு. ஆரம்ப காலங்களில் வெங்கட் பிரபுவின் போன் காலையே அஜித் எடுக்கவே மாட்டார் என வலைப்பேச்சு அந்தனன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அப்படி இருந்த அஜித் இப்போது வெங்கட் பிரபுவை தேடி போகிறார் என்றால் வெங்கட் பிரபுவின் திறமை மீது அஜித் வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம் எனக் கூறுகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் என்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபு இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

இன்னொரு பக்கம் சிறுத்தை சிவாவுடன் தான் அஜித் அடுத்ததாக இணையப் போகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்து தோல்விகளையே கொடுத்த சிறுத்தை சிவா மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அஜித் ரசிகர்கள் தாங்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என தெரிகிறது.


எப்படி பார்த்தாலும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களுக்கு அடுத்தடுத்து கார் ரேசில் கவனம் செலுத்தும் அஜித் அடுத்த வருடம் அக்டோபர் வரைக்கும் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியிடுவார் என அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

Next Story