Connect with us

Cinema News

எந்த நடிகரும் செய்யாத விஷயத்தினை யோசித்து செய்த அஜித்… தல எப்போவும் மாஸ் தானுங்கோ!…

Ajith: நடிகர் அஜித் மீது கோலிவுட் ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய வருத்தமே அவர் மற்றவர்களிடம் காட்டும் ஒதுக்கம் தான். அப்படி இருக்க அஜித்குமார் தன்னுடைய திருமணத்தில் பிறர் செய்யாமல் மிஸ் செய்த விஷயத்தினை யோசித்து செய்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் பிரேம புஸ்தகம் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த சமயத்தில் தமிழில் அமராவதி திரைப்படத்தில் நாயகன் வேட்டை நடந்து வருகிறது. உடனே அஜித்தை பரிந்துரை செய்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் பேச்சை கேட்ட இயக்குனர் செல்வா அஜித்தை கோலிவுட்டுக்குள் அழைத்து வருகிறார்.

இதையும் படிங்க: அட எனக்கே ஸ்கெட்ச்சா?… விஜய் செட்டை பார்த்து குழம்பிப் போன கே.பாலசந்தர்… ஷாக் தந்த இயக்குனர்…

முதல் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ச்சியாக அஜித்துக்கு வாய்ப்பு கிடைக்கிறது. தோல்விகளை பல கடந்து அஜித் தன்னை கோலிவுட்டில் அடையாளப்படுத்தி கொண்டார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. ஆனால் ஒரு கட்டத்தில் மொத்த ரசிகர் மன்றத்தினையும் கலைத்தார்.

இனிமேல் என்னை தல என்று கூப்பிடக்கூடாது. அஜித்குமார் அல்லது ஏகே என அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். தன்னுடைய படத்தின் புரோமோஷன்களை மொத்தமாக தவிர்த்தார். அப்படி தனித்து இருக்கும் அஜித்குமார் யாருக்குமே உதவியே செய்யமாட்டார். மறைந்த விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தினை கூட தவிர்த்தார். ஆனால் அதே அஜித்குமார் தன்னுடன் நடித்த ஷாலினியை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: அஜித்துக்கு கார் ரேஸ் மீது ஆர்வம் வந்தது இப்படித்தானாம்!. இதுவரை வெளிவராத தகவல்!..

சென்னை கன்னிமாரா ஹோட்டலில் 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி அஜித் – ஷாலினி திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் அரசியல், திரையுலகப் பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு விருந்து ஒரு பக்கம் நடந்தது. அதுப்போல அந்த பிரபலங்களில் கார் டிரைவர்களுக்கு தரமான உணவை ஒரு வாட்டர் பாட்டிலோடு ஒரு பாக்கெட்டில் கொடுக்க வேண்டும் என்று விரும்பிய அஜித், அதை செய்தும் காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top