கொள்கையாவது... கோட்பாடுவது.... விளம்பரத்தில் அஜித் - எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் அஜித்:
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்திலிருந்து வரும் நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பிலோ, படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிலோ அல்லது படத்தின் வெற்றி விழா இந்த மாதிரி எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் அஜித்தை பார்க்கவே முடியாது .

படத்தில் நடித்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து விடுவார். இதுதான் அஜித்தின் கொள்கை. இந்த கொள்கையை அவர் பல வருடங்களாக கடைபிடித்து வருகிறார். ஆனால், தற்போது தன்னுடைய கொள்கை அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு தற்போது விளம்பர திரைப்படங்களில் நடிக்கிறாராம்.
விளம்பரங்களில் அஜித்:
ஆம், நடிகர் அஜித் முன்னதாக கேம்ப்பா கோலா குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இதை பார்த்த எல்லோருமே நம்முடைய அஜத்தா இது? என்ன இப்படி என் தன்னோட கொள்கையை மாற்றிக்கொண்டாரே இது நம்ப முடியலப்பா என குழம்பிப் போயிருந்தார்கள் .
இந்நிலையில் தற்போது மீண்டும் இன்னொரு புதிய விளம்பரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். ஒரு பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க அஜித் கமிட்டாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது .
ரூ. 25 கோடி சம்பளம்:

இந்த விளம்பர படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் தான் இயக்குகிறார். இந்த கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதற்காக மட்டும் நடிகர் அஜித்திற்கு ரூபாய் 25 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது .
இப்படியே விளம்பரங்களில் மட்டும் நடித்து பணம் சம்பாதித்து விட்டு கார் ரேஸில் பங்கேற்று தன்னுடைய லட்சத்தை நோக்கி செல்லலாம் என அஜித் முடிவெடுத்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருந்தாலும் தன்னுடைய கொள்கையில் இருந்து டோட்டலாக மாறியிருக்கும் அஜித்தை ரசிகர்கள் நம்பவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
