Connect with us

Cinema News

தைரியமா வெளியே வந்து மக்களுக்கு நல்லது பண்ணும் விஜய்!.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.. பிரபலம் ட்வீட்!

பொதுவாகவே விஜய் பட அப்டேட் வந்தால் அநியாயத்துக்கு நெகட்டிவ் ஹேஷ்டேக்குகளை போட்டு கலாய்த்துத் தள்ளி விடுவார்கள் அஜித் ரசிகர்கள். ஆனால், தொடர்ந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த போது விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக வெளியான காட்சிகளை பார்த்தே இதெல்லாம் ரொம்ப தவறு என கண்டித்த அஜித் ரசிகர்கள் தற்போது திருநெல்வேலி மக்களுக்கு இன்று விஜய் செய்த உதவிகளை பார்த்து அஜித் ரசிகர்கள் விஜய்யை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய் தொடர்ந்து ரசிகர்களை சந்திப்பது, மக்களை சந்திப்பது, கூட்டத்தை எதிர்கொள்வது என தைரியத்துடன் மக்களை சந்தித்து வருவது அஜித் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் துபாயில் டூர் அடித்து வரும் நிலையில், மக்களுக்காக விஜய் நலத்திட்ட உதவிகளை செய்து வருவது பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

இதையும் படிங்க: என்னடா ஜோடி மாத்தி வெளியே அனுப்புறீங்க!.. இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்.. பரிதாப நிலையில் பிக் பாஸ்!

நடிகர் விஜய் இதையெல்லாம் அரசியல் உள்நோக்கத்திற்காகத்தான் செய்கிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் பரவாயில்லை மக்களுக்கு ஆஃப் ஸ்க்ரீனில் விஜய் நல்லது செய்வதே நல்ல விஷயம் தான் என கொண்டாடி வருவதை பார்த்த நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர் போட்ட ட்வீட் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

ஆனால், இதில் அஜித் ரசிகர்களுக்கு ஆதாயமும் உள்ளது என்றும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு கட்சி பணிகளுக்காக சில ஆண்டுகள் பிரேக் எடுக்கும் நேரத்தில் வரிசையாக அஜித் பெரிய இயக்குநர்கள் இயக்கத்தில் படங்களில் நடித்தால் நம்பர் ஒன் நடிகராக மாறிவிடுவார் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த நிவாரண பொருளை வாங்காமல் சென்ற சிறுவன்!.. துரத்திக் கொண்டு ஓடிய புஸ்ஸி ஆனந்த்!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top