அஜித் நடிப்பில் வலிமை படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே கொரொனா பரவல் காரணமாக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து மீண்டும் அனுமதி, பின் மீண்டும் தடை, பின் மீண்டும் அனுமதி என 2 வருடங்களாய் படாத பாடு பட்டு வலிமை படத்தை முடித்துள்ளார் ஹெச்.வினோத்.
இந்த 2 வருடங்கள் இப்படம் பற்றிய எந்த அப்டேட்டையும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட வெளியிடவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் கொடுத்தது. எனவே, டிவிட்டரில் அவரை திட்டி தீர்த்தனர். ஆனால், அஜித் கூறியதால்தான் அவர் எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இப்படத்தின் அதிரடி பைக் ரேஸ் மற்றும் சண்டை காட்சிகளை அவர் புரமோஷன் வீடியோக்களாக வெளியிட்டு அஜித் ரசிகர்களை போனிகபூர் திக்கு முக்காட செய்து வருகிறார். இன்றும் ஒரு அதிரடி சண்டை காட்சி வீடியோவை புரமோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
எனவே, ‘யோவ் போனி எல்லாத்தையும் இப்பவே விட்டா எப்படி?.. தியேட்டர்ல நாங்க பாத்துக்குறோம்.. அப்டேட்டு போதும்’ என அஜித் ரசிகர்கள் கெஞ்ச துவங்கிவிட்டனர். ஒருபக்கம், உன்ன போய் தப்பா நினைச்சிட்டோமே.. சாரிப்பா எனவும் சில அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…