×

ஆசை படத்தின் வெள்ளிவிழா ஆண்டு – கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித்தின் முதல் சூப்பர் ஹிட் படமான ஆசை படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளன.

 

அஜித்தின் முதல் சூப்பர் ஹிட் படமான ஆசை படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளன.

அஜித், சுவலட்சுமி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் ஆசை. ஆசை படத்துக்குப் பின் ஆசை நாயகன் என்ற பெயரைப் பெற்றார். ஆசை படத்துக்கு முன்னர் வரை ஏனோ தானோவென்று சினிமாவில் நடித்து வந்த அஜித் ஆசை வெற்றிக்குப் பின் தான் சினிமாவை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தார். அதனால் அஜித் இன்று இவ்வளவு பெரிய ஸ்டாராக இருப்பதற்கு ஆசை படமும் ஒரு முக்கியக் காரணம்.

ஆசைப் படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் அந்த படத்தைப் பற்றி தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். ஆனால் படத்தில் பணிபுரிந்தவர்கள் யாரும் அதை பற்றி தங்கள் மகிழ்ச்சியைக் கூட பகிர்ந்துகொள்ளவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News