கோட் படம் வந்தப்போ இதான் சொன்னொம்!.. நீ ரெஸ்பான்ஸ் பண்ணியா நீ?!.. வி.பி-ஐ கலாய்க்கும் அஜித் ஃபேன்ஸ்...
சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மூத்த மகன் ஆவார்.
வெங்கட்பிரபு முதலில் இயக்கிய சென்னை 28 திரைப்படம் வெற்றியடைந்ததால் சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதேபோல் சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படமும் சூப்பர் ஹிட் அடித்தது.ப்குறிப்பாக விஜயை வைத்து கோட் என்ற திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் தனது வீட்டில் உள்ள Godrej ஏசி பழுதடைந்துள்ளது.. இது தொடர்பாக ஒரு மாதமாக அந்த நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸை தொடர்பு கொள்கிறேன்.. ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.. சேவை மிகவும் மோசமாக இருக்கிறது’ என்று தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு சில அஜித் ரசிகர்கள் ‘இப்படித்தான் கோட் படத்துக்கு சொன்னோம்.. ஏதாச்சும் ரெஸ்பான்ஸ் பண்ணியா நீ?’ என கேட்டுது அவரை கலாய்த்து வருகிறார்கள்..
