தலனு கூப்பிடுறோம்.. அஜித்கிட்ட சொல்லிடுங்க! ரசிகரின் வேண்டுகோளுக்கு சுரேஷ் சந்திரா ரியாக்ஷன்

விடாமுயற்சி: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகெங்கிலும் ரிலீசானது. தமிழ்நாட்டில் சிறப்பு காட்சியாக 9:00 மணிக்கு விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் மற்ற அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் சிறப்பு காட்சியாக காலை 6.30 மணிக்கு திரையிடப்பட்டது. அதனால் படத்தை பார்த்து அண்டை மாநில ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தை பற்றி பாசிட்டிவ் கமெண்ட்களை கூறி வருகின்றனர்.
சுமார்: படத்தைப் பொறுத்த வரைக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்கக்கூடிய படமாக இருக்கிறது என கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்கிரீன் பிளே சுமாராகத்தான் இருக்கிறது என்றும் தகவல் கிடைத்திருக்கிறது .அனிருத் எப்பவும் போல இந்த படத்தில் மாஸ் காட்டி இருக்கிறார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் பாதி முழுவதும் அஜித் திரிஷா சம்பந்தப்பட்ட காதல் காட்சி தான் இடம்பெற்று இருக்கிறது.
இப்படி ஒரு வரவேற்பா?: அது பார்ப்பதற்கு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள் .ஆக மொத்தம் படம் சுமார் என்ற அளவிலேயே பெரும்பான்மையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன .இந்த நிலையில் இன்று முதல் காட்சியை பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வந்திருந்தார். ஒரு நடிகரின் மேலாளருக்கு இந்த அளவு வரவேற்பு எங்கேயும் கிடைத்ததில்லை.
படிச்சவன்தானே: அந்த அளவுக்கு ஒரு பெரிய வரவேற்பை சுரேஷ் சந்திராவுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்தனர். அதில் ஒரு ரசிகர் சுரேஷ் சந்திராவிடம் ‘சார் நான் படிச்சவன். ஐபிஎம்மில் வேலை பார்க்கிறேன். அஜித் சார் கிட்ட தலனு கூப்பிடுகிறோம் என்று மட்டும் சொல்லுங்க ’என்ற வேண்டுகோளை வைத்தார். அதற்கு சுரேஷ் சந்திரா ‘படிச்சவன் தானே. ஆனா சொல்றத கேட்க மாட்டேங்கிறீங்களே’ என சிரித்து; கொண்டே போனார்.
ஆனாலும் விடாமல் அந்த ரசிகர் ‘அம்மாவை அம்மா என்று தானே கூப்பிடுறோம். அதே மாதிரி தலய தலனு மட்டும் கூப்பிடுறோம். இதை மட்டும் அஜித் சார் கிட்ட சொல்லிடுங்க சார்’ என பணிவன்புடன் அவருடைய வேண்டுகோளை சுரேஷ் சந்திராவிடம் வைத்தார். அந்த ரசிகர் இப்படி கேட்டதும் சுற்றி இருந்த ரசிகர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.