Categories: Cinema News latest news

அஜித்தை சீண்டிய ஏஜிஎஸ்… ட்விட்டரில் வச்சி செய்யும் ரசிகர்கள்… நல்லாவா இருக்கு இதெல்லாம்?

Ajithkumar: நடிகர் அஜித்குமாரை தேவையே இல்லாமல் சீண்ட போய் ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது ட்விட்டரில் அஜித் ரசிகர்களிடம்  செமையாக வாங்கி கட்டி கொண்டு வருகின்றனர்.

கோட் திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்திற்கு ஓவர் புரோமோஷன் செய்தால் வசூலில் சிக்கல் வரும் என நினைத்தது படக்குழு.

இதையும் படிங்க: கோட் படத்தோட வெற்றி ரகசியம் இதுதானாம்… அப்படி என்னப்பா இருக்கு படத்துல?

இதை தொடர்ந்து, முதலில் ரிலீஸான பாடல்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. மோசமான விமர்சனங்களை குவித்தது. இருந்தும் படக்குழு அதை பெரிதாக கருதவில்லை. இருந்தும் படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. ரசிகர்களுக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவானது.

ags

படக்குழுவினர் கொடுத்த பேட்டியும் மிகப்பெரிய அளவில் ஹிட்டை கொடுத்தது. ஆனால், இப்படத்தில் அஜித்தை தூக்கி வைத்து கொண்டாடினர். மங்காத்தா வசனம், அஜித்தின் பெயர் என எல்லாமே கோட்டின் வெற்றிக்கு முக்கிய விஷயமாக அமைந்தது.

இதையும் படிங்க: கோட் படத்துக்கும் ராஜதுரைக்கும் இவ்ளோ ஒற்றுமைகளா? எல்லாமே உல்டா தானா!

இந்நிலையில் இப்படத்தில் அஜித்தை தூக்கி பாராட்டிய ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது செய்த ஒரு விஷயத்தால் வாங்கி கட்டிக்கொண்டுள்ளது. அதாவது, அஜித்தை மட்டம் தட்டி பேசிய வீடியோக்களை ரீட்வீட் செய்து இருக்கின்றனர். தற்போது அந்த பதிவு இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. #தரங்கெட்ட AGS என்ற ஹேஸ்டேக்கில் கழுவி ஊத்தி வருகின்றனர்.

இன்னும் அந்த ரீட்வீட் பதிவும் நீக்கப்படவில்லை என்பதால் அதை சொல்லியே அஜித் ரசிகர்கள் திட்டிவருகின்றனர். படம் இருக்கும் வரை அஜித்தை கொண்டாடிவிட்டு தற்போது அவரை அசிங்கப்படுத்துவது சரியா எனவும் கேள்வி எழுந்து வருகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily