Categories: Cinema News latest news

இதுக்கு மேல தல தாங்கமாட்டாரு!.. படப்பிடிப்பில் கோபப்பட்ட அஜித்.. பரபரப்பில் எடுத்த சீனுதான் ஹைலைட்டே..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்து சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார். துணிவு படம் வருகிற பொங்கல் என்று வெளியாகிறது.

துணிவு படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவனுடன் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார். இப்படி படிப்படியாக வெற்றிகளை குவித்தாலும் ஆரம்பகாலங்களில் பல தோல்வ்களை கடந்து தான் வந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் அவரை ஒர் சிறந்த நடிகராக காட்டிய படம் சிட்டிசன் திரைப்படம்.

ajith

அந்த படத்தை சரவணா சுப்பையா இயக்கியிருந்தார். அந்த படம் தான் சரவணா சுப்பையாவிற்கு முதல் படமாகும்.ஆனாலும் சரவணா சுப்பையா மற்றும் அஜித் இணைந்த கதையே வேற. கிட்டத்தட்ட 100 நாள்கள் அஜித்இந்த படத்திற்க் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: இரண்டு நிமிடத்தில் நடிக்க சம்மதித்த நடிகர் முரளி… ஆனா இப்பவும் அது ஒரு காதல் காவியம்!…

மேலும் சிட்டிசன் படத்திற்காக 2 படங்களின் கால்ஷீட்டை விட்டுவிட்டு சரவணா சுப்பையாவிற்காக விட்டுக் கொடுத்திருக்கிறார் அஜித்.ஆனால் கடைசி கோர்ட் சீனை மெதுவாக எடுத்துக் கொண்டிருந்தாராம் சரவணா சுப்பையா. இதனால் மிகுந்த கோபப்பட்டஅஜித் சரவணா சுப்பையாவிடம் வந்து கத்தினாராம்.

ajith

ஏனெனில் அடுத்த படமான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் கமிட் ஆகி சிட்டிசன் படத்திற்காக மூன்று மாதம் காத்திருக்கவைத்திருக்கிறார் அஜித். அதனால் தான் சிட்டிசன் படத்தின் கடைசி காட்சிகளை மெதுவாக எடுத்துக் கொண்டிருந்த சரவணாவிடம்கோபப்பட்டாராம்.

இதனை அறிந்த சக்கரவர்த்தி சரவணாவிடம் இதுக்கு மேல தாங்க மாட்டாருப்பா,சீக்கிரம் எடு என்று சொன்னாராம். மேலும் படப்பிடிப்பு முடிந்தகையோடு அடுத்த படத்திற்காக வைசாக் சென்று விட்டாராம். பட ரிலீஸ் சமயத்தில் தியேட்டரில் ரசிகர்களின் வரவேற்பை மொபைல் மூலம்கேட்டுக் கொண்டிருந்தாராம் அஜித். ஆனால் மிகுந்த பரப்பரப்புடன் எடுத்த அந்த கோர்ட் சீனு தான் அதிக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ajith

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini