×

மீண்டும் பதக்கங்களை குவிக்க தயாரான அஜீத்... துப்பாக்கு சுடும் பயிற்சி தீவிரம்...

கடந்த 2019-ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொண்டார் அஜித்.
 
Ajith

தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பன்முக நடிகர் அஜித், கார், பைக், ஏரோ மாடலிங் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். 

கடந்த 2019-ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொண்டார் அஜித். இதற்கிடையே அவர் செப்டம்பர் மாதம் நடக்கும் மற்றொரு தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கிறார்.

Ajith

அஜித் இந்த போட்டிக்காக தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள ரைபிள் கிளப்பில் அவரை அடிக்கடி காண முடிகிறது. மேலும் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு அவர் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஆறு பதக்கங்களை வென்றார். இது அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, அஜித்தின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டானது.

AjithAjith image widget

From around the web

Trending Videos

Tamilnadu News