Categories: Cinema News latest news

வெட்கமே இல்லாமல் அஜித்திடம் கேட்டேன்!.. துணிவு படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த நடிகை….

அஜித் மஞ்சுவாரியார் காம்போவில் உருவாகி இருக்கும் படம் தான் ‘துணிவு’. இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்திருக்கிறார். படம் முடிந்து பொங்கல் வரவுக்காக ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க ஆக்‌ஷன் அடிப்படையில் அமைந்த படமாக உருவாகி இருக்கிறது.

ajith

துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கூஸ் பம்பில் வைத்திருக்கிறது. டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் வெறித்தனமாக படத்தை பார்க்க ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்தில் விஜய் டிவி புகழ் அமீர் , பாவ்னி, சிபி, நடிகர் சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : நீங்க எதுனாலும் பேசுங்க..கவலையில்லை!.. விஜய் ஆசைப்பட்டது இதுதான்.. ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்

ஐதராபாத் தவிர வெளி நாடுகளிலும் படப்பிடிப்புகள் நடந்தன. வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து துணிவு படம் தயாராகி இருக்கிறது. படத்தில் அஜித்திற்கே உரித்தான துப்பாக்கி சுடும் சீனும் ஏகப்பட்ட அளவில் இருக்கின்றது. அதில் அஜித் சும்மா பறந்து விளையாடியிருக்கிறார். இதில் மற்றுமொரு ஆச்சரியம் என்னவெனில் இதுவரை ஆக்‌ஷன் படத்திலேயே நடிக்காத மஞ்சு வாரியார் உட்பட

ajith manju warrier

துப்பாக்கியை வைத்து சுடும் காட்சியில் நடித்திருக்கிறார். இதை பற்றி மஞ்சு வாரியாரிடம் கேட்ட போது எனக்கு துப்பாக்கி பிடிக்கவே தெரியாது எனவும் படங்களில் தான் பார்த்திருக்கிறேன் எனவும் கூறினார். மேலும் துப்பாக்கியை கையில் கொடுத்துஆக்‌ஷன் என சொன்னதும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

உடனே வேறு வழியில்லாமல் வெட்கத்தை விட்டு அஜித் சாரிடம் போய் தான் கேட்டேன். எப்படி துப்பாக்கி பிடித்து சுடவேண்டும் என்று . அவர் தான் எனக்கு முழுவதுமாக சொல்லிக் கொடுத்தார். துப்பாக்கியை பிடிப்பதில் அஜித் சார் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். சொல்லிக் கொடுக்கும் போது மிகவும் பொறுமையாக நிதானமாக எப்படி பிடிக்க வேண்டும் கையை எந்த இடத்தில் பிடித்து சுட வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் மஞ்சு வாரியார் கூறினார்.

ajith manju

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini