ரசிகர்கள் இததான எதிர்பார்த்தாங்க.. ரேஸ் களத்திலிருந்து அஜித் சொன்ன விஷயம்
நம்பர் ஒன் நடிகர்:தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். சினிமாவில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அஜித் அடுத்ததாக தனது நீண்ட நாள் கனவான கார் ரேஸ் பந்தயத்திலும் கலந்து கொள்ள இருக்கிறார். அதற்கான பயிற்சிகள் இப்போது நடைபெற்றுவருகின்றன. 24H ரேஸ் கார் பந்தயத்தில் பல நாடுகள் கலந்து கொண்ட நிலையில் இந்தியா சார்பில் அஜித் 7வது இடத்துக்கு முன்னேறினார்.
அஜித்துக்கு சப்போர்ட்:24 மணி நேரமும் நடக்கும் இந்த போட்டியில் அஜித் 7வது இடத்துக்கு தேர்வானார். இன்றும் அந்த போட்டி தொடர்கிறது. அவருடைய இந்த கார் பந்தயத்தை பார்க்க அஜித் ரசிகர்களும் அங்கு சென்றனர். அதுமட்டுமில்லாமல் அஜித்துக்கு சப்போர்ட் பண்ண நடிகர் ஆரவும் அங்கு சென்றிருக்கிறார். கூடவே அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் சென்றிருக்கிறார். இதுவரை எந்தவொரு சேனலுக்கும் பேட்டி கொடுக்காத அஜித் கார் ரேஸ் களத்தில் இருந்து பேட்டி கொடுத்து வருகிறார்.
ரசிகர்களுக்கு மெசேஜ்:அப்போது ரேஸ் முடியும் வரை எந்தவொரு படங்களிலும் நடிக்க போவதில்லை என்றும் விடாமுயற்சி படம் ஜனவரி மாதமும் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதமும் ரிலீஸாக இருக்கின்றன என்றும் அஜித் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் என்னை பார்க்க இத்தனை ரசிகர்கள் வருவார்கள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அதனால் unconditionally i love them என கூறியிருக்கிறார்.
இத்தனை வருடங்களாக இதைத்தான் அஜித் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அஜித் ரசிகர்களுக்காக எதுவும் சொல்லமாட்டாரா? அவருடைய அன்பை கொடுக்க மாட்டாரா என்றெல்லாம் ஏங்கிப் போயிருந்தனர் அவருடைய ரசிகர்கள். ஆனால் அஜித் சொன்ன இந்த வார்த்தை அவருடைய ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கார் ரேஸ் களத்தில் இருக்கும் ரசிகர்களை பார்த்தி அஜித் ஃபிளையிங் கிஸ் கொடுத்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் செய்திருக்கிறார் அஜித்.
செப்டம்பர் மாதம் வரை நடக்கும் இந்த போட்டி அஜித் இருப்பதனால் தமிழ் ஆடியன்ஸ்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை கார் ரேஸ் பற்றி அந்தளவுக்கு விழிப்புணர்வு இல்லாத மக்கள் இப்போது அஜித்தால் அந்த ரேஸ் மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.