ஏப்ரலுக்கு போன தர்மன் ...பொங்கலுக்கு துண்டை போட்ட அஜித்
ஜெயிலர் 2 பிரமாண்ட வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அடுத்து வெளிவரும் படம் தர்மன். டிராகன் வெற்றிக்கு பின் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் இப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முதலில் பொங்கல் அன்று இப்படம் வெளீயாவதாக முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது தர்மன் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் படத்தின் பாடல்கள் சிலவற்றை அனிருத் இன்னும் கொடுக்கவில்லையாம். தற்போது அவர தனது திருமண விழாவிற்கான ஏற்பாட்டில் பிஸியசக உள்ளார். எனவே அவர் பாடலை கொடுக்க குறைந்தது ஒரு மாதமாவது ஆகலாம் என்பதால் டஹ்ர்மன் வெளியீட்டை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் அஜித் தற்போது தனது படத்தினை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளார். அஜித் தனது கார் பந்தயத்தை மையப்படுத்தி ஒரு ஆவண படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கிளாடியேட்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தை, ஷாலினி அஜித்குமார் கோல்டன் டிராபி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது பொங்கலுக்கு ரஜினியின் தர்மன் படம் வெளியாகவில்லை என்ற செய்தி உறுதியானதை அடுத்து தனது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளர் அஜித்.
