அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப் படமான Gladiators-ன் அசத்தலான போஸ்டர்!
'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு 'தல' அஜித் நடிப்பில் 'டேர் டெவில்' மற்றும் 'கிளாடியேட்டர்ஸ்' என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் 'கிளாடியேட்டர்ஸ்' படத்தை 'கிரீடம்' இயக்குநர் ஏ.எல்.விஜய் தான் இயக்கியிருக்கிறார். இது வழக்கமான ஹீரோ, ஹீரோயின், வில்லன், ஒரு சுவாரஸ்யமான கதைக்களம் என செல்லும் படம் அல்ல.
அஜித் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார் அல்லவா, அதை வைத்து ஆவணப் படமாக எடுத்திருக்கிறார்கள்.
🏁 #GLADIATORS – In Pursuit of Challenges 🏎️🇮🇳
— Suresh Chandra (@SureshChandraa) August 4, 2026
Get ready for an inspiring journey of passion, perseverance, and the relentless pursuit of greatness.
Releasing Soon in Theatres. 🎬🏎️
Directed by #Vijay @Akracingoffl @goldentrophyllp
Music by @gvprakash @SureshChandraa… pic.twitter.com/3WjqOgfAK6
இதை 'கோல்டன் டிராபி புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் ஷாலினி அஜித்குமார் தயாரித்துள்ளார். இதன் அசத்தலான போஸ்டரை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.
