Categories: latest news

ஒன் டே வில் கம்! கூப்பிட்டு வச்சு அஜித்தை அவமானப்படுத்திய இயக்குனர்.. யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ஆரம்ப காலங்களில் ஏகப்பட்ட தடை கற்களை உடைத்து கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் அஜித். இன்று கடவுளே அஜித்தே என்று சொல்லும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஆனால் எந்த ஒரு ரசிகர் மன்றமும் வைத்துக் கொள்ளாமல் இத்தனை லட்ச ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய உழைப்பே காரணம். இவர் எப்போதுமே என்னுடைய தோல்விக்கு நானே காரணம் என்றும் என்னுடைய வெற்றிக்கு எனக்கு ஏற்பட்ட வலிகள் தான் காரணம் என்றும் கூறுவார் .

இதையும் படிங்க: ஆல் ஏரியாவையும் அதிரவிட்ட புஷ்பா 2… தமிழ்நாட்டுல 100 கோடியாமே?!… மாஸ்டர் பிளான் போங்க…

அந்த அளவுக்கு பல அவமானங்களையும் கஷ்டங்களையும் தாண்டி சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு இயக்குனரால் அஜித் அவமானப்பட்ட சம்பவம் பற்றி ஆஸ்கார் பிலிம்ஸ் பாலாஜி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். 90கள் காலத்தில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்தவரின் பிறந்தநாள் விழா நடைபெற்று கொண்டிருந்ததாம்.

அந்த விழாவிற்கு அஜித்தும் அழைக்கப்பட்டிருந்தாராம். அதனால் அஜித் அங்கு போக அந்த இயக்குனர் ஒரு தனி அறையில் தன் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடி கொண்டிருந்தாராம். அஜித் வெளியே அமர அந்த இயக்குனரின் உதவியாளரிடம் நான் வந்திருப்பதாகவும் அவருக்கு வாழ்த்துக்களை கூற வந்திருப்பதாகவும் போய் சொல்லுங்கள் என அந்த உதவியாளரிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார் அஜித்.

இதையும் படிங்க: கங்குவா படத்தால் சூர்யா கேரியரில மாற்றம்… ரோலக்ஸ்ல நடிச்சாலும் சிக்கல் இருக்கு…! பிரபலம் சொல்லும் தகவல்

ajith 2

உள்ளே போன அந்த உதவியாளர் இரண்டு மணி நேரமாகியும் வெளியே வரவே இல்லையாம். அதன் பிறகு வெளியே வர மீண்டும் அஜித் போய் சொன்னீர்களா, என்ன சொன்னார் என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த உதவியாளர் இருங்க மீண்டும் போய் சொல்கிறேன் என திரும்பவும் உள்ளே சென்று இருக்கிறார் .உள்ளே சென்ற அந்த உதவியாளர் மீண்டும் வெளியே வர இயக்குனர் இப்பொழுது பிஸியாக இருக்கிறாராம்.

அதனால் நாளை உங்களை சந்திக்க வரச் சொன்னார் என அஜித்திடம் சொல்லி இருக்கிறார். இதை கேட்டதும் அஜித்திற்கு மிகுந்த கோபம் வந்திருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தாமல் அந்த உதவியாளரை அழைத்து  ‘ஒன் டே வில் கம்’ என சொல்லிவிட்டு சென்றாராம். இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அஜித்தின் கோபத்தை முதன் முதலில் பார்த்தேன் என ஆஸ்கார் பிலிம் பாலாஜி கூறினார்.

அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை டேம் என்ற பெயரில் படத்தை எடுத்தவர் தான். இதிலிருந்து நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என பாலாஜி கூறினார். ஆனால் அதே இயக்குனர் அஜித் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்ததும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் பழசை எதுவும் மறக்காமல் தன் பக்கத்திலேயே அந்த இயக்குநரை நெருங்கவே விடவில்லையாம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini