மொழி தெரியாத இடம்.. பசிக்குதுனு சொன்ன அஜித்! ஆடு மேய்ப்பவர் செய்த செயல்
நடிகர் அஜித்:
அஜித்தை பொறுத்தவரைக்கும் அவர் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்குமே தெரியும். அவருடைய ஒரே குறிக்கோள் உலகெங்கிலும் பைக் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான். சினிமா படப்பிடிப்பில் இருந்தாலும் அவ்வப்போது படப்பிடிப்பிற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு சில நாள்கள் தன் நண்பர்களுடன் சேர்ந்து பைக் பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்த பைக் பயணத்தில் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவர் அஜித். புது புது மனிதர்கள், சாதி மதம் பார்க்காமல் பழகும் மனிதர்களை நம் பயணத்தில்தான் சந்திக்க முடியும். மேலும் பயணத்தில் நம்மை நாமே புரிந்து கொள்ள முடியும் என்ற வகையில் சில தத்துவக் கோட்பாடுகளை பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார் அஜித்.
அஜித்தின் எண்ணம்:
அது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. நடிகர் சத்யராஜ் கூட அதை வரவேற்று பேசியிருந்தார். இந்த நிலையில் சமுத்திரக்கனி அஜித்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அஜித்துடன் சமுத்திரக்கனி துணிவு படத்தில் நடித்திருப்பார். அப்படி ஒரு சமயம் அஜித்தும் சமுத்திரக்கனியும் பேசிக் கொண்டிருந்த போது சில விஷயங்களை அஜித் பகிர்ந்திருந்தார் என்று சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.
துணிவு படத்தில் நடிக்கும் போது அஜித் சார் சொன்னது என்னவெனில் ஒரு முறை பைக்கை எடுத்துக்கொண்டு போய் பாருங்கள். உங்களை நீங்கள் உணர்வீர்கள். அதுவும் குறிப்பாக உங்களை யாருனே தெரியாத இடத்திற்கு பயணப் படுங்கள். இன்னும் நிறைய உங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கும். அப்படி ஒரு முறை பயணப்படும் போது ஒரு கிராமம் நிறைந்த ஊர்.
மொழி தெரியாத மக்கள்:
அங்கு கடைகளே இல்லாத இடம். அஜித் சார் அப்படி பயணப்படும் போது அவருக்கு திடீரென பசித்திருக்கிறது. அப்போது அங்கு ஒரு ஆடு மேய்ப்பவரிடம் அஜித் சார் எனக்கு பசிக்குதுனு சொல்லி கேட்டாராம். உடனே அந்த ஆடு மேய்ப்பாளர் தன்னுடைய குடிசைக்கு அழைத்துச் சென்று தன் வீட்டில் இருந்த ஒரு முட்டையை எடுத்து அவர் வைத்திருந்த ஒரு ரொட்டியில் முட்டையை வைத்து ஏதோ செய்து சாப்பிடுவதற்கு கொடுத்து இருக்கிறார்.
உடனே அஜித் அதை வாங்கி சாப்பிட்டு பதிலுக்கு பணம் கொடுத்தாராம். ஆனால் அந்த ஆடு மேய்ப்பாளர் பணம் ஒரு பொருட்டு இல்லை. பசிக்கு சாப்பாடு தான் போட்டேன். பணம் வேண்டாம் என சொல்லி மறுத்து விட்டாராம். மொழி தெரியாத ஊர். வெறும் உணர்வுகளால் மட்டுமே அந்த பயணம் நடந்தது என்று சொன்னாராம். அதனால் நீங்களும் ஒரு பயணம் பண்ணுங்கள். இந்த உலகம் என்ன? நீங்கள் யார்? நீங்க இந்த உலகத்தில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என எல்லாமே உங்களுக்கு புரியும் என்று சமுத்திரக்கனிக்கு அறிவுரை வழங்கினாராம் அஜித்.
Also Read: மீண்டும் முதல்வன் கதையா?.. கேம் சேஞ்சரிலாவது தப்பிப்பாரா நம்ம பிரம்மாண்டம்..!