Categories: Cinema News latest news

வெளிலதான் இவ்ளோ பிரச்சினைனா வீட்டுக்குள்ளேயுமா? தனிமையில் அஜித்.. டிப்ரஸனுக்கு இதுதான் காரணமா?

Actor Ajith: அஜித் வீட்டுக்குள் தனிமையில்தான் இருக்கிறார் என்ற பகீர் தகவலை கூறியிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன். ஷாலினியை காதலித்து கரம் பிடித்த அஜித் இன்று வரை ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில்தான் இருக்கிறார். ஒரு மகள், மகனுடன் குடும்பத்தை மிகவும் சந்தோஷமாக கழித்துக் கொண்டு வருகிறார் அஜித். ஆனால் அஜித்தை விட ஷாலினிதான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுமந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்,

சமீபத்தில்தான் அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்து வீடு திரும்பியிருக்கிறார். இதற்கு முன்பு எத்தனையோ அறுவை சிகிச்சை செய்தாலும் இப்போது நடந்த அந்த அறுவை சிகிச்சை மிகவும் ரிஸ்க்தான் என்று சொல்லப்படுகிறது. இதற்கு பிறகும் அஜித்துக்கு தேவை ஓய்வுதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் முன்னோடியா இருக்கும் கமலுக்கே தண்ணி காட்டிய விஜய்! மரண பயத்தை காட்டிய தளபதி

அவருடைய நெருங்கிய நண்பர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்களாம். அவர்கள் அஜித்தின் இந்த அறுவை சிகிச்சை குறித்து சில ஷாக்கான தகவல்களை கூறினார்களாம். அதாவது இதற்கு மேலும் அஜித் படத்தில் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க கூடாது மற்றும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அந்த மாதிரி விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

இனிமேல் அவருக்கு ஒரு கலகலப்பான சூழ்நிலை. சந்தோஷமான வாழ்க்கை இதுதான் அஜித்தை மகிழ்ச்சியாக்கும் என கூறினார்களாம். ஆனால் அஜித் வீட்டிலேயும் தனிமையாகத்தான் இருக்கிறாராம். அதாவது அஜித் வீட்டில் ஷாலினி அவருடைய அப்பாவையும் தங்க வைத்திருக்கிறாராம். அதனால் ஷாலினி குழந்தைகள் மற்றும் அப்பாவுடன் பொழுதை கழிப்பதாகவும் ஷாமிலி மற்றும் அவரது சகோதரர் தனித்தனி வீட்டில் வசிப்பதாலும் அஜித் எப்பொழுதும் வீட்டு செக்யூரிட்டியிடம் தான் பேசிக் கொண்டிருப்பதாக அந்தணன் கூறினார்.

இதையும் படிங்க; சாய்ந்து படுத்து சகலத்தையும் காட்டும் ராஷி கண்ணா!.. ஜூம் பண்ணி அழகை ரசிக்கும் புள்ளிங்கோ!..

இப்படியாகத்தான் அஜித்துக்கு டிப்ரஸன் ஆகி இவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்றும் அந்தணன் கூறினார். இனிமேலாவது இந்த சூழ்நிலை மாற வேண்டும் என அவர் கூறினார்.

 

 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini