டேர் டெவில் ஷூட்டிங்கில் அஜித்.. வைரல் புகைப்படங்கள்..
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அஜித் எந்த புதிய படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அவர் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். இடையில் வந்துதான் குட் பேட் அக்லி படத்திலேயே நடித்தார். அவரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என முடிவானது. ஆனால் அந்த படத்திற்கு அஜித் ரூ.185 கோடி சம்பளம் கேட்டார். ஆனால் அவ்வளவு சம்பளத்தை அவருக்கு கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.

ஒரு கட்டத்தில் தானே அந்த படத்தை தயாரிப்பது என்கிற முடிவுக்கு அஜித் வந்தார். அவரின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராக அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. தற்போது அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு அஜித் நடித்து வருகிறார். சமீபத்தில் அனிருத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அந்த கெட்டப்புடன்தான் அஜித் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களும் வைரலானது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் டேர் டெவில் ஷூட்டிங் நடக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைகளில் வைரலாகி வருகிறது.
