நடிகர் அஜித்குமார் தற்போது அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை H.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் விறுவிறுவென நடைபெற்று வருகிறது.
இந்த படம் தான் அஜித்திற்கு வினோத் கூறிய முதல் கதை என கூறப்படுகிறது. அதனால் எந்த வித சமரசமும் இல்லாமல் இப்படத்தை வினோத் இயக்கி வருகிறார் என கூறப்படுகிறது. இப்பட ஷூட்டிங் விறுவிறுவென நடைபெறும் வேளையில் , அஜித் தனது விடுமுறையை கழிக்க லண்டன் பறந்து விட்டாராம். அதனால், வினோத் தற்போது அஜித் இல்லாத காட்சிகளை இயக்கி வருகிறாராம்.
தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ளதாக கூறப்பட்ட அஜித்தின் லண்டன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது. சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென ஏன் லண்டன் போகிறார்? ஒருவேளை அங்கு எதாவது சூட்டிங் இருக்குமோ? என தவித்து வந்த ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் பைக் ரைடில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சூட்டிங் இடையில் தனது விருப்பமான ஒன்றாக கருதப்படும் பைக் ரைடில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…