×

வலிமை படப்பிடிப்புக்கு போய் ஊர் சுற்றும் அஜித்... செம வைரல் புகைப்படங்கள்...

நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
 
valimai
ஹைலைட்ஸ்:
படப்பிடிப்பு படக்குழு சென்னை திரும்பிவிட்டாலும் முடிந்தாலும் அஜித் இன்னும் ரஷ்யாவில்தான் இருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடையேயும், திரையுலக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் துவக்கத்தில் துவங்கிய இப்படம் தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை, ஹைதராபாத் என படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு படக்குழு ரஷ்யா சென்றது. அங்கு பரபர ஆக்‌ஷன் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. இதோடு, வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்படுகிறது. எனவே, தீபாவளிக்கு முன்பே இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.

valimai
ajith in russia

இந்நிலையில், படப்பிடிப்பு படக்குழு சென்னை திரும்பிவிட்டாலும் முடிந்தாலும் அஜித் இன்னும் ரஷ்யாவில்தான் இருக்கிறார். மனுஷன் ஜாலியாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கிறார்.  அங்கு பல இடங்களில் நின்று அவர் எடுத்துக்கொணட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ajith
ajith in russia

From around the web

Trending Videos

Tamilnadu News