×

நடித்தால் அஜித் கூடதான்… சூப்பர் ஸ்டார் ரஜினி மகளின் ஆசை!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாக சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாக சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தனது இரண்டு மகள்களையும் நடிக்க வைக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் இயக்குனர்களாக சினிமாவில் இயங்கி வருகின்றனர். மூத்த மகள் ஐஸ்வர்யா 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதே போல சௌந்தர்யா கோச்சடையான் மற்றும் விஐபி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அளித்த நேர்காணல் ஒன்றில் ’அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும்.  அவருடன் இணைந்து நடிக்க நான் மிகவும் விரும்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் அவரின் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவேயில்லை. ஆனால் இப்போது அவர் இயக்குனராக உள்ளதால் அஜித்தை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News