×

சமூக வலைதளங்களில் இணைகிறாரா அஜித் ? இணையத்தில் வைரலாகும் கடிதம் !

நடிகர் அஜித் எந்தவிதமான சமூகவலைதளங்களிலும் இல்லாத நிலையில் இப்போது ஒரு கடிதம் வைரலாக பரவி வருகிறது.

 

நடிகர் அஜித் எந்தவிதமான சமூகவலைதளங்களிலும் இல்லாத நிலையில் இப்போது ஒரு கடிதம் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் கடந்த் 2011 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்து விட்டார். மேலும் சமூகவலைதளங்களில் எந்தவிதமான பெயரிலும் இல்லாமல் இருந்து வருகிறார். ஆனால் அவர் சம்மந்தபட்ட செய்திகள் அனைத்தும் சமூகவலைதளங்களில் ஹிட்டாக்கி கொண்டாடுவது அவரது ரசிகர்களின் வழக்கம்.

இந்நிலையில் அஜித் மீண்டும் சமூக வலைதளத்துக்கு வரபோவதாக அஜித் பெயரில் வெளியானக் கடிதம் பரவி வருகிறது. அதில் ’நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த கடிதம் உண்மை இல்லை என அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News