தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறார் நடிகர் அஜித். அஜித் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதாகவே அமைகின்றன. இவரின் ஆரம்ப கால படங்கள் எல்லாமே கமெர்ஷியலாக குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே அமைந்தன.
ஆனால் தற்போது ஆக்ஷன் கதைகளை மையமாக கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கின்றார். இவரின் நடிப்பில் வெளியான கிரீடம் படம் நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தன. அந்த படத்தை இயக்கியவர் ஏஎல்.விஜய். அதுவும் விஜய்க்கு இது தான் முதல் படம்.
கிரீடம் படத்தின் பாடல்கள் அனைத்தும் யாரும் எதிர்பாராத அளவில் செம ஹிட். ஆனால் படத்தின் க்ளைமாக்ஸில் தவறவிட்டனர் படக்குழு. இது மலையாள படத்தின் ரீமேக் ஆகும். மலையாள வெர்சனில் ரௌடியை தண்டித்து ஹீரோவை தண்டித்து விடுவார்கள். அது அங்கு உள்ள மக்களுக்கு பிடித்திருந்தது.
இதையும் படிங்கள் : அடி மட்டத்துக்குப்போன சிம்பு பட வசூல்!…சக்சஸ் மீட் எல்லாம் நடத்துனீங்களே புரோ!….
ஆனால் கிரீடம் படத்தில் ஏற்கெனவே போலீஸாக இருக்கும் அஜித் ரௌடியை கொல்லுவதால் அவருக்கு ஒரு அவார்டு கொடுத்து மேலதிகாரியாக பதவி பிரமாணம் செய்து வைப்பது போல படத்தை முடிச்சிருலாம் என விஜயின் அப்பா எவ்ளவோ கூறினாராம். ஆனால் படக்குழு கேட்கவில்லையாம். மலையாளத்தில் இருக்கிற மாதிரியே எடுத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என விஜயின் அப்பா அழகப்பன் கூறினார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…