×

அஜித் + கே எஸ் ரவிக்குமார் +சன் பிக்சர்ஸ் கூட்டணியா ? களேபரமான டிவிட்டர் !

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

 

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக அஜித் ரசிகர்கள் ஒரு செய்தியை வேகமாகப் பகிர்ந்து கொண்டு வந்தனர். இதனால் டிவிட்டர் உலகம் பரபரப்பானது. அது என்ன செய்தி என்றால் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாக அவர் பெயர் கொண்ட டிவிட்டர் கணக்கு மூலமாக யாரோ பற்ற வைத்ததுதான் இப்படி பற்றி எரிய ஆரம்பித்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்த வில்லன் மற்றும் வரலாறு ஆகிய படங்கள் மெஹா ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ‘அன்பான நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு, நேற்று முதல் ஒரு வதந்தி வேகமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜித்தை நான் இயக்குவதாக. ஆனால் அது உண்மை இல்லை. அதுபோல எனக்கு டிவிட்டரில் எந்த கணக்கும் இல்லை. அதனால் டிவிட்டர் மூலம் வரும் எந்த விஷயத்தையும் நம்ப வேண்டாம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News