பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருந்த திரைப்படம் அஜித்குமாரின் வலிமை. அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள், 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு வலிமை ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
ஏற்கனவே இயக்குனர் H.வினோத் – தயாரிப்பாளர் போனிகபூர் – அஜித்குமார் கூட்டணி நேர்கொண்ட பார்வை எனும் சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து இந்த வலிமை படத்தில் இணைந்தது. தற்போது இந்த கூட்டணி 3வது முறையாக இணைய உள்ளது.
இந்த படத்திற்கு தற்போதைக்கு AK-61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினம் முடிந்த பிறகு ஜனவரி 16ஆம் தேதி பூஜை நடைபெறும் என கூறப்படுகிறது. அதன் பிறகு ஷூட்டிங்கிற்கான வேலைகள் தொடங்கப்பட்டு பின்னர் மார்ச் 3ஆம் தேதி அஜித்திற்கு உகந்த வியாழக்கிமை அன்று படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடக்கும், அதற்கடுத்து ஹைதிராபாத்தில் மீதம் உள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…