AK 64'-ன் ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா ப்ளான் போட்ட அஜித்!

 
Ajith AK 64

நடிகரும், கார் ரேஸருமான அஜித் இப்போது தனது அடுத்த படமான 'AK 64'-ல் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வொர்க் முடிவடைந்து விட்டதாம்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளனர். இந்த ஷெட்யூல் 6 நாட்கள் மட்டுமே நடக்கவுள்ளது. 

அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குமாம். இந்த ஆண்டு (2026) டிசம்பர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விடுவார்களாம்.

அஜித்தும், அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவி்ச்சந்தர் இசையமைக்கப்போகிறார். படத்தை அடுத்த ஆண்டு (2027) சம்மரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web