S நடிகரா?.. P நடிகரா?.. விஜய்க்காக அஜித் பார்த்த வேலை!.. நண்பன்னா இப்படி இருக்கணும்!..

 
S நடிகரா?.. P நடிகரா?.. விஜய்க்காக அஜித் பார்த்த வேலை!.. நண்பன்னா இப்படி இருக்கணும்!..

அஜித்தின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒரு பிரபலத்தை ஆதிக் ரவிச்சந்திரன் புக் செய்து வைத்திருந்தார் என்றும் ஆனால், விஜய் பற்றி மோசமாக அந்த பிரபலம் பேசிய நிலையில், அவரை நீக்கிடுங்க என அஜித் அதிரடியாக ஆர்டர் போட்டுள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி பரபரப்பு கருத்தை தெரிவித்து திரையுலகை ஷாக் ஆக்கியுள்ளார்.

அஜித் நடித்த கடைசி படமான குட் பேட் அக்லி படத்திலேயே ஐ எம் வெயிட்டிங் என விஜய்யின் வசனத்தை அஜித் பேசியிருந்தார். தேர்தல் அன்று காலையிலேயே முதல் நபராக வந்து வாக்கு செலுத்தி சென்றார். விஜய் போலவே மீடியாக்களை அவர் சந்திப்பதை தவிர்த்தார். ஆனால், மாற்றம் வேண்டாம் என அஜித் சொன்னதாக சில மீடியாக்கள் செய்தியாக்கி அதை மு.க. ஸ்டாலினிடம் சொல்லி செய்தியாக்கினர்.

S நடிகரா?.. P நடிகரா?.. விஜய்க்காக அஜித் பார்த்த வேலை!.. நண்பன்னா இப்படி இருக்கணும்!..

மு.க. ஸ்டாலினும் அந்த செய்தியை விசாரிக்காமல் அதை தேர்தல் தினத்துக்கு சாதகமாக பயன்படுத்தினார். ஆனால், அஜித் உடனடியாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவை வைத்து அறிக்கை வெளியிட்டு அது முற்றிலும் பொய் என்றார்.

அஜித் குமார் தனக்கு பிடித்த ரேஸ் பக்கம் சென்ற நிலையில், விஜய் மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு இறங்கியிருப்பது அஜித்துக்கு ரொம்பவே பிடித்துள்ளது என்றே கூறுகின்றனர். கருணாநிதிக்கு நடைபெற்ற பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலைஞர் முன்பாகவே அஜித் பேசியதும் ரஜினிகாந்த் கை தட்டியதும் மறக்கவே முடியாது.

அஜித் குமாரின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருக்க காரணமும் அதுதான் என்கின்றனர்.

இந்நிலையில், விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜ் மற்றும் சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக விஜய்யை அட்டாக் செய்து பேசிய நிலையில், அஜித் தற்போது விஜய்க்கு எதிராக பேசிய நடிகர் வேண்டாம் எனக் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போஸ் வெங்கட் கூட தொடர்ந்து விஜய்க்கு எதிராக பேசி வருவதால் ஒருவேளை அவராக இருக்குமா என்றும் கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அஜித்துடன் சத்யராஜ் பகைவன் எனும் படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் உடன் ஆசை, ராசி, பரமசிவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

From Around the web