Connect with us

Gossips

ஒரு இயக்குனரால் விழுந்த அடி.!? தனது வழியை தானே மாற்றிய அஜித்குமார்.!

வலிமைக்குப் பிறகு, அஜித்குமார் அடுத்த படத்தில் எச் வினோத் மற்றும் போனி கபூருடன் மீண்டும் இணந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.தற்போதைக்கு, இந்த பெயரிடப்படாத படம் தற்காலிகமாக AK61 என்று குறிப்பிடப்படுகிறது. இப்போது, ​​படத்தின் டைட்டில் வலிமை போலவே பூஜை விழாவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இப்படத்திற்கு எச் வினோத் புரொடக்‌ஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆக்‌ஷன் கலந்த எமோஷனல் த்ரில்லரான இந்த படத்தின் முதல் ஷெட்யூலுக்கான பிரமாண்டமான செட்டை அமைக்கும் பணியில் இயக்குனர், அவரது தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அஜித் தற்போதெல்லாம் இயக்குனர்களிடம் பௌண்டட் ஸ்க்ரிப்ட் கேட்டுவிடுகிறாராம். அதன்படி, AK61 திரைப்படத்தின் பௌண்டட் ஸ்க்ரிப்ட் எச் வினோத்திடம் கேட்டுள்ளார் அவரும் கொடுப்பதாக ஓகே சொல்லியுள்ளார். ஆனால் பிரமாண்ட செட் அமைக்கும் பணியில் எச் வினோத் பிசியாக உள்ளதால் இன்னும் அஜித்திடம் பௌண்டட் ஸ்க்ரிப்ட் கொடுக்கமுடியவில்லை.

இதற்கிடையில், பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்ட வலிமை கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ளார், கதாநாயகியாக காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி, வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். வலிமை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top