அம்மா மரணத்திற்கு பிறகு வெளிநாட்டில் குடும்பத்துடன் அஜித்!.. பிரான்ஸ் டூர் போட்டோஸ்!..
நடிகர் அஜித் குமாரின் குடும்ப புகைப்படங்கள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில், தற்போது அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி பகிர்ந்துள்ள புதிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பகிர்ந்துள்ள புகைப்படங்களில், அஜித் தனது மகன் மற்றும் மகளுக்கு அன்பாக முத்தமிடும் காட்சிகளும், குழந்தைகள் தங்களது தந்தைக்கு முத்தமிடும் நெகிழ்ச்சியான தருணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்களுடன் "Daddy Time" என்ற வாசகத்தையும் ஷாலினி பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றன. குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் அஜித்தின் இந்த பாசமான தருணங்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன.
இதற்கிடையில், சமிபத்தி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமான செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. அந்த துயரமான சூழ்நிலைக்குப் பிறகு குடும்பத்தினருடன் அமைதியாக நேரத்தை செலவிட்டு வருவது அஜித்திற்கு ஆறுதலாக காணப்படுகின்ற புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏகே 64 திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படைப்புக்கு அனைவரும் கார்த்துக்கிண்டிருக்கின்றனர்.
ஒருபுறம் குடும்பம், மறுபுறம் கார் பந்தயம், அதே நேரத்தில் திரையுலகப் பொறுப்புகள் என பிஸியாக இயங்கி வரும் அஜித், தற்போது குடும்பத்துடன் பகிர்ந்துள்ள இந்த அன்பான தருணங்கள் மூலம் மீண்டும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார்.
