
Cinema News
18 கோடியில் அஜித் வாங்கியுள்ள காஸ்ட்லி கார்.. காரணம் இதுதான்!..
Ajithkumar: கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சினிமாவில் நடிப்பது அவருக்கு தொழில் என்றாலும் பைக் ரேஸ்களில் கலந்து கொள்வது, கார் ரேஸ் கலந்து கொள்வது, பைக்கை எடுத்துக் கொண்டு பல நாடுகளுக்கும் போவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என அவருக்கு பல விஷயங்களில் ஆர்வம் உண்டு.
இதில் திருமணத்திற்கு பின் ஷாலினி கேட்டுக் கொண்டதால் பைக் ரேஸில் கலந்து கொள்வதை விட்டுவிட்டார். கடந்த சில வருடங்களாக கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். ஒருபக்கம் சினிமாவிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் குட் பேட் அட்லி அவர்களை திருப்திப்படுத்தியது.
இந்தப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அஜித்துக்கு நிறைய ரசிகர்கள் இருப்பது போல அஜித் சில கார் ரேஸ் பந்தய வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார். சமீபத்தில் அப்படி ஒரு கார் ரேஸ் வீரர் பயன்படுத்திய ஒரு வகையான காரை வாங்கி இருக்கிறார். அந்த காரின் விலை 18 கோடி என சொல்லப்படுகிறது.
அஜித் துபாயில் ஏற்கனவே இரண்டு வீடுகளை வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் நிறைய கார் மற்றும் ரேஸ் பைக்குகளையும் அவர் வாங்கி அந்த வீட்டில் வைத்திருக்கிறார். தற்போது 18 கோடிக்கு புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இப்படியே போனால் முழுக்க முழுக்க துபாய் வாசியாகவே அவர் மாறிவிடுவார் போல.