
Cinema News
இந்த சம்பளம் இல்லனா படமே வேணாம்!.. அடம்பிடிக்கும் அஜித்!.. சிக்கலில் AK64..
AK64: குட் பேட் அக்லி ஹிட் அடிக்கவே அதே படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் இந்தப் படத்தில் தனது சம்பளம் 180 கோடி என அஜித் எடுத்த முடிவு சிக்கலை ஏற்படுத்தியது. அஜித்துக்கு 180 கோடி, இயக்குனருக்கு 20 கோடி மற்றும் படம் எடுக்கும் செலவுகள் என சேர்த்தால் இப்படத்தின் பட்ஜெட் 300 கோடி வருகிறது.
ஆனால் அஜித் படத்திற்கு 300 கோடி செலவு செய்ய எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை. சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அஜித் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டால் இது பற்றி பேசலாம் என எல்லோரும் சொல்லி விட்டார்கள்.
அதன் பின்னர்தான் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இதில் உள்ளே வந்தார். அடிப்படையில் ராகுல் ஒரு சின்ன விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர். ஆர்வமாக இப்படத்தை தயாரிக்க அவர் முன் வந்தாலும் அவரால் இதை செய்ய முடியவில்லை. அதற்கு காரணம் படத்தின் சேட்டிலைட் மட்டும் டிஜிட்டல் உரிமைகளை அஜித் தனக்கு எழுதி தர சொல்லிவிட்டார்.

பொதுவாக சினிமா துறையில் அந்த இரண்டு உரிமைகளையும் அடமானமாக வைத்து படம் எடுப்பார்கள். அஜித் அந்த உரிமைகளை வாங்கிக் கொண்டதால் படம் எடுப்பதற்கு பணத்தை தயார் செய்ய முடியவில்லை. எனவே இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து கிட்டத்தட்ட ராகுல் வெளியேறிவிட்டதாகவே சொல்லப்பட்டது.
எனவே தற்போது எந்த தயாரிப்பாளர் எனும் கிடைப்பார் என வலைவீசி தேடி வருகிறார்கள். விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கிய லலித்குமாரிடம் பேசி இருக்கிறார்கள். அவர் கணக்கெல்லாம் போட்டு அஜித் 125 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டால் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என சொல்லி இருக்கிறார். ஆனால் அஜித் இறங்கி வரவில்லை. தனக்கு இந்த சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என கறாராக சொல்லிவிட லலித்தும் கைவிரித்து விட்டார். எனவே வேறு ஏதேனும் தயாரிப்பாளர் கிடைக்கிறாரா என்னை தேடி வருகிறார்கள்.
பொதுவாகவே விஜயின் சம்பளத்தோடு ஒப்பிட்டுதான் அஜித் தனது சம்பளத்தை நிர்ணயிப்பார். ஜனநாயகன் படத்திற்கு விஜய் 250 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் அஜித் 180 கோடி வரை சம்பளம் கேட்கிறார் என்கிறார்கள். அதனால்தான் ஏகே 64 படம் டேக் ஆப் ஆகாமல் சிக்கலில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.