Categories: Cinema News latest news

லேட்டா வந்த மேக்கப் மேனுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்த அஜித்குமார்… தல போல வருமா…

தமிழின் டாப் நடிகராகவும் பெரும்பான்மையான சினிமா ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருப்பவருமாகிய அஜித்குமார், சக நடிகர்களுக்கு மரியாதை தருவதில் சிறந்த பண்பாளராக திகழ்ந்து வருபவர். “அவரை பார்த்தால்தான் எரிமலை, ஆனால் பழகிப்பார்த்தால் குழந்தை” என அஜித்துடன் நடித்த சக நடிகர்கள் பலரும் கூறுவார்கள். இந்த நிலையில் தனது படப்பிடிப்பின் போது தன்னுடைய மேக்கப் மேனை, அஜித் மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Ajith Kumar

அதாவது ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்திற்கு மேக்கப் போடும் மேக்கப் மேன், ஒரு நாள் மிகவும் தாமதமாக வந்தாராம். வரும்போது மிகவும் டென்ஷனாக ஓடி வந்து அஜித்திடம் “சார். ரெண்டு பஸ் பிடிச்சி மாறி மாறி வரணும்.  பஸ்ல வேற நிறையா கூட்டம். அதனால் லேட் ஆயிடுச்சுண்ணே” என்றாராம்.

அதற்கு அஜித் “பஸ்ஸில் வந்தியா??” என கேட்டு “உன் கிட்ட பைக் இல்லையா?” என்று கேட்டாராம். அதற்கு அவர் பைக் “இல்லைங்க” என கூறினாராம். “பைக் ஓட்டத் தெரியுமா?” என அஜித் கேட்க அதற்கு அவர் “தெரியும் சார், நல்லாவே ஓட்டுவேன்” என கூறினாராம். அதன் பின் அன்றைய படப்பிடிப்பு முடிந்தபோது அந்த மேக்கப் மேனை அழைத்தார் அஜித்.

இதையும் படிங்க: தளபதி 67 குறித்து தெரியாத்தனமாக வாய் விட்ட மனோபாலா… ஆதாரத்தை வைத்து மிரட்டி வரும் நெட்டிசன்கள்…

Ajith Kumar

அப்போது அஜித்தின் மேனேஜர் ஒரு புதிய பைக்கை கொண்டு வந்தாராம். அதனை பார்த்த மேக்கப் மேன் அசந்துப்போனாராம். அந்த மேக்கப் மேனிடம் பைக்கின் சாவியை கொடுத்த அஜித், “இனிமே பைக்ல வா, பைக்ல போ. லேட்டா வரக்கூடாது” என கூறினாராம்.

அந்த மேக்கப் மேன் அந்த சாவியை திரும்ப அஜித்திடம் கொடுத்திருக்கிறார். அதற்கு அஜித் “ஏன், என்னாச்சு?” என கேட்டாராம். அதற்கு அந்த மேக்கப் மேன் “அண்ணே, முதன்முதலில் கொடுக்குறீங்க. என்னைய ஆசீர்வாதம் பண்ணிட்டு கொடுங்கண்ணே” என கூறி அஜித்தின் காலில் விழுந்தாராம். தனது காலில் விழுந்த அவரை முதுகில் அடித்து “இதெல்லாம் எனக்கு பிடிக்காது. இந்தா பைக்கை வச்சிக்கோ” என கூறி சாவியை அவரிடம் தந்தாராம்.

Arun Prasad
Published by
Arun Prasad