மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் குமார்!.. ஷாலினி ஷேரிங்ஸ்!..

 
ajith

நடிகர் அஜித்குமார் சினிமா, கார் ரேஸ் என பிஸியாக இருந்தாலும் தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக அஜித் திடீரென சென்றபோது எடுத்த புகைப்படத்தை நடிகை ஷாலினி பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் அடுத்த திரைப்படமான டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை ஷாலினி தனது பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும்,இப்படத்தில் ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், பார்த்திபன், பிரபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 

அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் நிலையில் அஜித் அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். அஜித் தனது வேலைகளுக்கு மத்தியில் மகனுக்காக நேரம் ஒதுக்கியிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

CR  Desk
CR Desk

7913 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web