அஜித் குமார் இல்லாமல் நடந்த ‘டேர் டெவில்’ பட பூஜை!.. விளம்பரத்தில் பிஸியோ?..

 
dd

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் டேர் டெவில் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

dd

அஜித் வழக்கம் போல் பூஜையில் கலந்துக்கொள்ளவில்லை அவருக்குப் பதிலாக மனைவி ஷாலினி மற்றும் மகன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், பிரபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி, உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ஷாலினி அஜித்தின் Bravehearts Productions நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

dd

அஜித்தின் 64-வது படமாக உருவாகும் இப்படம், குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனுடன் அவர் மீண்டும் இணையும் படமாகும். நவம்பர் 12 முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

dd

இதற்கிடையே அஜித்தின் கிளாடியேட்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்த படமான டேர் டெவில் ஷாலினி தயாரிப்பில் உருவாக உள்ளது. தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைந்து பணியாற்றுவது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Tags

From Around the web