×

சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு; எனக்கு தொழில்... வருத்தத்தில் அஜித் கொடுத்த ஸ்டேட்மெண்ட்

வலிமை அப்டேட் அப்டேட் என தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த ரசிகர்களால் அஜித் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
 
 

அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை வினோத் இயக்குகிறார். இதுமட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் அப்டேட்டிற்காக பலரையும் தொல்லைக் கொடுத்து வருகிறார்கள். அப்படக்குழுவினரிடம் கேட்டது போக தமிழக முதல்வர், பாரத பிரதமர் வரை எல்லாரிடமும் ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்த பிரச்சனையை தீர்க்க முடிவு செய்யும் விதமாக, அஜித்தே கடைசியில் ஸ்டேட்மெண்ட் விடுத்து விட்டார். அதில், கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை படம் குறித்த அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்துவரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தப்படி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நேரத்தை நான் தயாரிப்பாளருடன் இணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.


இதே நேரத்தில், தயாரிப்பாளர் போனி கபூரும் தனது தரப்பில் இருந்து சிறிது காலம் எடுக்கும் எனக் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News