Categories: Cinema News latest news

அஜித்திற்கு தமிழ் படிக்கவே தெரியாதாம்.! ஷூட்டிங்கில் நடந்த ரகசிய சங்கதி இதுதானாம்.!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர்களில் முக்கியமான நடிகர் அஜித்குமார். இவரது திரைப்படங்கள் வெளிவரும் நாளை திருவிழாவாக அவர் ரசிகர்கள் மாற்றி விடுகின்றனர். அவரது திரைப்படங்கள் எப்படி இருந்தாலும் ஓபனிங் கிங் என நிரூபித்துவிடுகிறார்.

அப்படி அவருக்கு பல தமிழ் திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலை கொடுத்துள்ளன. தமிழ் சினிமாவில் இவ்வளவு உச்சம் தொட்டுள்ள அஜித்திற்கு ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் படிக்கவும், எழுதவும் தெரியாதாம். தமிழ் பேசுவதற்கு மட்டுமே தெரியுமாம் . பட சம்பந்தமான பேப்பர்களில் கூட ஆங்கிலம் தான் இருக்குமாம். வசனத்தை கூட ஆங்கிலத்தில் எழுதி வைத்ததுதான் நடிப்பாராம்.

இந்த தகவல் “ஆரம்பம்” பட ஷூட்டிங்கின் போது நடந்ததாக வெளியானது. அப்போது நடிகர் ஆர்யாவுக்கும் தமிழ் எழுத தெரியாதாம். நடிகர் ஆர்யா மற்றும் அஜித் “ஆரம்பம்” பட ஷூட்டிங் சமயத்தில் தமிழ் எழுதுவதற்கும் , படிப்பதற்கும் கற்றுக் கொண்டு வந்தார்களாம். இதை அப்போதே பல நாளிதழ்களில் செய்தியாக வெளியிட்டிருந்தன.

இதையும் படியுங்களேன் – முன்னணி நடிகர்களே செய்யாததை விஷயத்தை செய்த நபர் வடிவேலு தான்.! அடித்து கூறும் பிரபலம்.!

தற்போது அவர் தமிழ் கற்றுக் கொண்டாராம். தமிழ் எழுத தெரியுமா ? என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், தமிழை நல்ல முறையில் பேசுவதற்கு அஜித்திற்கு தெரியும் என்பது மட்டும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், திரை ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

Manikandan
Published by
Manikandan