ஹாலிவுட்லதான் பண்ண முடியுமா? அஜித்த வச்சு முடியும்.. சித்ரா லட்சுமணன் சொன்ன யோசனை
அஜித்:
படம் ரிலீஸ் ஆகுதோ இல்லையோ. தன்னை பற்றி அதிகமாக ரசிகர்களை பேச வைப்பவர் நடிகர் அஜித். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது அந்த நாள் மட்டும்தான் சோசியல் மீடியா பரபரவென இருக்கும். ஆனால் அஜித்தின் புகைப்படம் வெளியானலே அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திவிடுவார்கள். துணிவு படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை.
ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னை பற்றி அதிகமாக பேச வைத்தார் அஜித். எதாவது ஸ்டில்ஸ் வெளியிடுவது, பைக் பயணம் மேற்கொள்வது என இந்த மாதிரி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் ஜனவர் 10 ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கிறது. அதோடு குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.
ஸ்லிம்மாக தோன்றி ஆச்சரியப்படுத்திய அஜித்:
இன்னும் இரண்டு நாள்களில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைய இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக தன்னுடைய கவனத்தை கார் ரேஸில் செலுத்த இருக்கிறார். ஜனவரி 10 ஆம் தேதியில் இருந்து ரேஸ் ஆரம்பமாக இருக்கிறதாம். அதற்காக தன்னை ஆயத்தப்படுத்தியும் வருகிறார். இதில் திடீரென ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்பதிர்ச்சி ஊட்டினார் அஜித்.
கிட்டத்தட்ட 20கிலோ எடை குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடுமையான வொர்க் அவுட் இல்லையாம். சரியான முறையில் டயட் இருந்திருக்கிறாராம் அஜித். ஒரு வேளை படத்திற்குதான் ஸ்லிம்மாக மாறினாரா என்று பார்த்தால் கார் ரேஸுக்காகத்தான் தன்னுடைய எடையைக் குறைத்திருக்கிறார் என்று சொல்லபடுகிறது. ஆனால் அது படத்திற்கும் உபயோகமானது.
தமிழ்நாட்டு ஜேம்ஸ் பாண்ட்:
கடைசியாக விடாமுயற்சி படத்திற்காக ஒரு ஸ்டில்ஸ் வெளியானது. ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் திரிஷாவுடன் இருக்கும் மாதிரியான புகைப்படம் மிகவும் வைரலானது. இந்தப் புகைப்படத்தை பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறும் போது ‘அஜித்தின் இந்த மாற்றம் யாரும் எதிர்பார்க்காதது. தமிழ் நாட்டு ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்லலாம். ஏன் இவரை வைத்து ஜேம்ஸ் பாண்ட் படத்தையே இப்பொழுது எடுக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.