Connect with us

Cinema News

அஜித்தின் பட வாய்ப்பை கெடுத்த ஏ.ஆர் முருகதாஸ்! – பதிலுக்கு தல செய்த வேலை!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். நடிகர் விஜய்க்கு பிறகு தமிழில் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் கதாநாயகனாக தல அஜித் இருந்து வருகிறார். இந்த மாதிரியான பெரிய கதாநாயகர்களை வைத்து திரைப்படம் இயக்கும்போது இயக்குனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதுவும் வளர்ந்து வரும் இயக்குனர்கள், பெரும் நட்சத்திரங்களிடம் செய்யும் சிறிய தவறு அவர்களது சினிமா வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கும் கூட இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

இப்போது முருகதாஸ் தமிழ் சினிமாவில் பெரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்தாலும் 2004 காலக்கட்டத்தில் அவர் ஒரு வளர்ந்து வரும் இயக்குனராகவே இருந்தார். அப்போதுதான் கஜினி திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி வந்தார். ஏற்கனவே அவர் இந்த படத்தின் கதையை நடிகர் அஜித்திடம் கூறியிருந்தார்.

அஜித்திற்கு இந்த கதை பிடித்துப்போகவே அவரும் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருந்தார். இதற்கு நடுவே இந்த கதையை கேள்விப்பட்ட சூர்யாவிற்கும் இந்த கதை பிடித்துபோனது. சூர்யா இதுக்குறித்து முருகதாஸிடம் கேட்க முருகதாஸும் அஜித்திடம் இதுக்குறித்து கேட்காமல் சூர்யாவை கமிட் செய்து படத்தை இயக்கி முடித்துவிட்டார்.

இதற்கு பிறகு அஜித் நடிக்கும் மற்றொரு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார் ஏ.ஆர் முருகதாஸ். அந்த படத்திற்கு ரூபாய் 1 கோடி சம்பளம் கேட்டார். இந்த விஷயத்தை அறிந்த அஜித் சம்பளத்தை காரணமாக கூறி முருகதாஸை அந்த படத்தில் இருந்து விலக்கினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது வரை முருகதாஸ் அஜித்தை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

Continue Reading

More in Cinema News

To Top