×

அஜித் போட்ட கண்டிஷன் - அப்செட் ஆன ரசிகர்கள்

தனது பிறந்தநாள் தொடர்பான நடிகர் அஜித் தெரிவித்துள்ள கருத்து அவரின் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
 

ரஜினி, விஜய் வரிசையில் அதிக ரசிகர்களை கொண்டவர் தல அஜித். இவர் வருகிற மே 1ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். 

இதைத்தொடர்ந்து, டிவிட்டரில் ஒரு காம் டிபியை உருவாக்கி அவரின் பிறந்தநாளை கொண்டாட அவரின் ரசிகர்கள் முடிவு செய்திருந்தனர். எனவே, #ThalaAJITHBdayGalaCDP என்கிற ஹேஷ்டேக்கில் இன்று காலை முதல் அவரின் ரசிகர்கள் புது புது புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை உருவாக்கி பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கொண்டாட்டம் வேண்டாம் என அஜித் தரப்பில் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை நடிகர் சாந்தனுவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். மே1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் என எதிர்பார்த்திருந்த தல ரசிகர்கள்,  கண்டிப்பாக அஜித் இதை அனுமதிக்கமாட்டார் என்பதை உணர்ந்து ஏமாற்றம் நடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News